தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

Sri Lanka Weather
By Mayuri Oct 12, 2024 11:14 AM GMT

சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், களனி கங்கையை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

குடா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் அதனை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் | Weather Alert In Sri Lanka

அத்துடன், அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW