கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

Trincomalee Sri Lanka India Tourism Eastern Province
By Laksi Oct 12, 2024 08:30 AM GMT
Laksi

Laksi

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது  நேற்றையதினம் (11) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் முதலில் புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்குவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இரு நாடுகளின் உறவு

அத்தோடு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாம் செயல்படுவோம் அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் | Deputy High Commissioner India Meet Jayantha Lal

இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை இந்திய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், மிகவும் பாராட்டுவதாகவும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துடனும் கிழக்கு மாகாணத்துடனும் இணக்கமாகச் செயற்படும் எனவும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கவுள்ளதாக உலக உணவுத் திட்டம் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW