ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்

Anura Kumara Dissanayaka Sri Lanka United States of America
By Laksi Oct 11, 2024 03:40 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றுள்ளது.

இதன்போது, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டது.

வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்

வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடு

அத்தோடு, எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் | Discussion Between The President Samantha Power

அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

பொதுத்தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்: அப்துல்லா மகரூப்

வன்னியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபரின் தகவல்

வன்னியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மாவட்ட அரச அதிபரின் தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW