புதிய சூரிய மின் கட்டணங்கள் குறித்து இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

CEB Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Rakshana MA Jun 22, 2025 03:31 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மின்சார சபை (CEB) 20 வருட ஒப்பந்த அடிப்படையில் கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளுக்கான புதிய நிலையான மின்கட்டணங்களை அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டணங்கள், அமைப்புகளின் திறனடிப்படையில் மாறுபடுவதுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவல்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி 0 - 5 kWஇற்கு இடையிலான அமைப்புகள் ஒரு அலகுக்கு 20.90 ரூபாயை என்ற அதிகபட்ச கட்டணமாக பெறவுள்ளன. இதைத் தொடர்ந்து 5 – 20 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 19.61 ரூபாய் கட்டணம் கிடைக்கும்.

இஸ்ரேல் - இலங்கை வரவுள்ளோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

இஸ்ரேல் - இலங்கை வரவுள்ளோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

அலகு ஒன்றுக்கான புதிய கட்டண விவரம்

இந்த நிலையில், அமைப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​கட்டணம் குறைகிறது. எடுத்துக்காட்டாக, 20–100 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 17.46 ரூபாயை பெறும், அதேநேரம், 100–500 kW அமைப்புகள் 15.49 ரூபாயை பெறும்.

புதிய சூரிய மின் கட்டணங்கள் குறித்து இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு | New Solar Tariffs Announced By Ceb

500–1,000 kW மற்றும் அதற்கு மேற்பட்ட 1,000 kW இலிருந்து பெரிய அமைப்புகள் முறையே 15.07 ரூபாய் மற்றும் 14.46 ரூபாய்களை பெறும் என்று அறிவிக்கப்படுள்ளது.

இலங்கையின் எரிசக்தி துறையில் நிரந்தர வளர்ச்சி மற்றும் பசுமை ஆற்றல் இலக்குகளை அடைய முக்கிய பங்களிப்பை வழங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது, நாட்டின் மின்னறுக்கங்களை குறைக்கும், மற்றும் ஆற்றல் சுயதிறனை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு

அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வு

சிலாவத்துறை ஆக்கிரமிப்பு பதில் தாருங்கள் - ரவூப் ஹக்கீம்

சிலாவத்துறை ஆக்கிரமிப்பு பதில் தாருங்கள் - ரவூப் ஹக்கீம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW