மட்டக்களப்பிலுள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Cancer Batticaloa Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Aug 06, 2025 03:34 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேரில் ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட்டு வருகின்றது.

இது ஒரு சமுதாய பிரச்சினையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்று நோய் தடுப்பு சங்க தலைவருமான கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "மாவட்டத்தில் வாகன சாரதிகள் நடத்துனர்கள் வெற்றிலை, பாக்கு புகையிலை, புகைத்தல் போன்றவற்றிற்கு அடிமையாகியுள்ளனர்.

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

பழக்க வழக்கங்கள் 

அவை இல்லாமல் அவர்களது தொழிலை செய்ய முடியாது உள்ளனர். இது எந்தளவுக்கு வாய்புற்று நோயை கொண்டு வரும் என்பது எங்களுக்கு தெரியும்.

மட்டக்களப்பிலுள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | One In Seven In Batticaloa Get Cancer

இது பெரும் சமூதாய பிரச்சினையாக இருக்கின்றது. எனவே முதலில் இந்த வாகன சாரதிகள் நடாத்துனர்களை முதலில் பரிசோதித்து புற்று நோயை இனம் கண்டு வெற்றிலை, பாக்கு, புகையிலை , புகைத்தல்களை பாவிப்பதால் ஏற்படும் புற்று நோய் தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டல்களை தெளிவுபடுத்துவதன் மூலம் இதனை தடுக்கமுடியும்.

இந்த வெற்றிலை, பாக்கு புகையிலை, பாவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எச்சரிக்கை

இதனால் அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இது தொடர்வதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பிலுள்ள மக்களின் சுகாதார நிலைமை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | One In Seven In Batticaloa Get Cancer

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்று நோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சினையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.   

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

கிழக்கில் சத்துருக்கொண்டான் படுகொலையை சர்வதேச விசாரணை செய்ய கோரிக்கை

கிழக்கில் சத்துருக்கொண்டான் படுகொலையை சர்வதேச விசாரணை செய்ய கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW