தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Kandy Sri Lankan Peoples Economy of Sri Lanka Money Coconut price
By Rakshana MA Aug 05, 2025 06:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண அளவிலான தேங்காய் ஒன்றின் சில்லறை விலையில் 185 முதல் 205 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 160 முதல் 190 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

தேங்காய் விலை அதிகரிப்பு

இதேவேளை கண்டியில் உள்ள தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவிற்கு தேவையான கொப்பரையை வாங்குவதில் அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Coconut Prices Rise Again In Sl

எசல பெரஹெராவிற்கு இருபது மெட்ரிக் தொன் கொப்பரை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, கடந்த பெரஹெராவின் போது, ஒரு கிலோ கொப்பரை ரூ.250-350 வரை வாங்கப்பட்டது.

இருப்பினும், இந்த முறை ஒரு கிலோ கொப்பரை ரூ.500-600 வரையான விலையில் வாங்கப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பொருட்கள் விலை குறைப்பை எதிர்வரும் 3 வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி.சரத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையிலுள்ள புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

காத்தான்குடி படுகொலையின் உண்மைகள் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம்

காத்தான்குடி படுகொலையின் உண்மைகள் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மௌனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW