ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம்

Football Sri Lanka Palestine Gaza
By Rakshana MA Aug 05, 2025 09:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை கால்பந்து வீரர் முகமட் தில்ஹமுக்கு, பஸ்தீனுக்கான ஆதரவுத் தகவலை ஆட்டத்திற்குப் பிறகு வெளிக்காட்டியதற்காக ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) 2,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

இந்த சம்பவம், 2025 ஜூன் 10ஆம் திகதி கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஏஎஃப்.சி ஆசியக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் சீன தைபேய் (Chinese Taipei) அணிகள் மோதிய பிறகு நடந்தது.

அந்த போட்டியில் இலங்கை 3–1 என வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, குழு புகைப்படம் எடுக்கும் தருவையில், பயன்படுத்தப்படாத மாற்று வீரரான 19 வயது தில்ஹம், தனது அதிகாரப்பூர்வ ஜெர்ஸியை உயர்த்தி, “PRAY FOR FREE PALESTINE” என எழுதியிருந்த உள்ளாடையை வெளியே காட்டியுள்ளார்.

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

கடந்த 4 மாதங்களில் 3000ற்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

சட்ட விதி மீறல்

இச்செயல், சர்வதேச கால்பந்து விதிமுறைகளை மீறுவதாகவும், விளையாட்டு நடைமுறைகளுக்குப் பொருந்தாததாகவும் ஏ.எஃப்.சி அறிவித்தது.

ஆட்டத்திற்கு பிறகு காசாவுக்க ஆதரவு வழங்கிய இலங்கை வீரர்! விதிக்கப்பட்ட அபராதம் | Sl Player Fined For Palestine Message

இருப்பினும், தில்ஹம் அளித்த விளக்கம் மற்றும் பிற பரிசீலனைகள் காரணமாக, கடுமையான தண்டனை தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வார் உமர் தெரிவித்ததுப்படி, ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அபராதத் தொகை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தில்ஹம் இந்த அபராதத் தொகையை செலுத்த ஒரு மாத கால அவகாசம் பெற்றுள்ளார். சமீபத்திய தகவலின்படி, குறைந்தது இரண்டு வாரங்கள் இன்னும் அவகாசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

முத்து நகரில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க போராடும் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW