12 வருடங்களின் பின் ஒலுவில் துறைமுகத்திட்டத்தில் மாற்றம்! வெளியான தகவல்

Ampara Government Of Sri Lanka Sri Lankan Peoples Ministry of Finance Sri Lanka Denmark
By Rakshana MA May 20, 2025 03:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

12 வருடங்களாக செயலற்றிருக்கும், அம்பாறை - ஒலுவில் துறைமுகத்திட்டத்தை மீண்டும் செயற்படுத்த முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், அதற்கான சாத்தியமான வழிகளை கண்டுபிடிப்பதில் அரசாங்கத்தினால் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத் திட்டத்துக்கான கடன் ஒப்பந்தம், டென்மார்க்கின் நோர்டியா வங்கிக்கும் இலங்கையின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சகத்திற்கும் இடையே 2008 மே 23 அன்று, கையெழுத்தானது.

அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

துறைமுகப்பயன்பாடு

இதன்படி மொத்த திட்ட செலவு 46 மில்லியன் யூரோக்களாகும் இந்த திட்டம் 2013 இல் நிறைவடைந்தது. எனினும், துறைமுகம் இப்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

12 வருடங்களின் பின் ஒலுவில் துறைமுகத்திட்டத்தில் மாற்றம்! வெளியான தகவல் | Oluvil Port Project

அத்துடன், துறைமுக நுழைவாயிலில் மணல் திட்டுகள் குவிந்து கிடப்பதால் கப்பல்கள் வரமுடியாமல் உள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருவதாக பிரதியமைச்சர் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடியில் பாரிய விபத்து : ஒருவர் பலி

ஓட்டமாவடியில் பாரிய விபத்து : ஒருவர் பலி

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

கிழக்கில் அதிகரிக்கும் கடற்கொள்ளையர்களின் திருட்டு சம்பவங்கள் : மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW