அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்

Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province Local government election Sri Lanka 2025
By Rakshana MA May 19, 2025 06:45 AM GMT
Rakshana MA

Rakshana MA

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தது.

ஒவ்வொரு கட்சியிலும் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குதல் என்ற வாத பிரதி வாதங்கள் எழுந்துள்ள இவ்வேளையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர்கள் நேற்று மாலை (2025.05.18) எஸ் எம் சபீஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 11 கடும் நிபந்தனைகள்

பிரதேச சபை உறுப்பினர்கள் 

அதன்படி, அனைத்துப்பள்ளி வாசல்களின் முன்னாள் தலைவர் எஸ்.எம் சபீஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னாள் பணிப்பாளர் பொறியியலாளர் என்.ரீ.எம்.சிராஜுடீன், எம்.எம். முபாஸ் ஆகியொர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அக்கறைப்பற்று சபைக்கு தெரிவான மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் | Akkaraipattu Sabha Members From Mc

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக அக்கறைப்பற்று அரசியல் பயணத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சுமார் 7500 வாக்குகளைப் பெற்றுள்ள வேளையில், புதிதாக அக்கரைப்பற்று அரசியல் பரப்பில் கால் பதித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2500 வாக்குகளைப் பெற்றது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாழைச்சேனையில் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரசியல் தலைமைத்துவத்திற்கான போட்டி.. மறக்கப்பட்ட கொள்கை

அரசியல் தலைமைத்துவத்திற்கான போட்டி.. மறக்கப்பட்ட கொள்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGallery