ஓட்டமாவடியில் பாரிய விபத்து : ஒருவர் பலி
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Accident
Death
By Rakshana MA
மட்டக்களப்பு - நாவலடி(Navaladi) பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்துச்சம்பவமானது நேற்று(19) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்து சம்பவத்தில் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





