சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் மீட்பு

Badulla Crime Branch Criminal Investigation Department Crime Law and Order
By Laksi Oct 05, 2024 04:02 PM GMT
Laksi

Laksi

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி வருமானத்தை புறக்கணித்திருந்த ஜீப் வாகனமொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஜீப் வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, உபயோகித்து வந்துள்ளதாக ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர், குறித்த வாகனத்தை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நீதிமன்ற உத்தரவு

இருப்பினும், குறித்த உத்தரவை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பத்தது.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் மீட்பு | Officials Seized An Illegal Jeep In Sri Lanka

நீதிமன்ற உத்தரவுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் ஜீப் வாகனத்தை பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதே கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது

சிறையிலுள்ள கணவனுக்கு போதைப்பொருள் கொடுக்க முற்பட்ட மனைவி கைது

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW