நாட்டில் பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்
Sri Lanka
Sri Lanka Food Crisis
Ministry of Agriculture
Economy of Sri Lanka
By Laksi
நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தானியங்கள் இறக்குமதி
அத்தோடு, சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் நுகர்வுக்கு போதுமானதாக இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தானியங்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |