அனுர ஆட்சியமைத்தால் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் : இம்ரான் ஆதங்கம்

Anura Dissanayake Imran Maharoof Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 04, 2024 03:04 PM GMT
Laksi

Laksi

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக வரக் கூடிய செல்வாக்குள்ள முஸ்லிம்கள் யாருமில்லை. அவர்கள் கூறுவது போல ஆட்சியமைத்தாலும் அவர்களது அமைச்சரவையில் பொறுப்புள்ள முஸ்லிம்கள் யாருமிருக்க மாட்டார்கள்.

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் கோட்டாபயவின் யுகமே ஏற்படும்: ரிஷாட் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டினால் கோட்டாபயவின் யுகமே ஏற்படும்: ரிஷாட் பகிரங்கம்

ஜனாஸாக்கள் எரிப்பு 

இதனால் முஸ்லிம்கள் நலன் சார்ந்த விடயங்கள், பண்பாடு, கலாசாரம் சார்ந்த விடயங்களை பேச அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். இது முஸ்லிம் மக்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அமைச்சரவை மூலம் இதனை நாம் தெளிவாக அறிந்து கொண்டோம்.முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது கோத்தாபயவின் அமைச்சரவையில் எடுத்துக் கூறி அதனைத் தடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்காமை நமக்கு நல்ல உதாரணமாகும்.

இதுபோன்ற நிலைமையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தாலும் உருவாகும். தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கு முஸ்லிம் கலாசார பண்பாட்டு விடயங்கள் தெரியாது. இஸ்லாம், சிறுவர்களை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தவதாக பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

முஸ்லிம்களின் வாக்கு

இதேபோல, அக்கட்சியில் உள்ள இன்னும் சிலரும் இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.சிலவேளை முஸ்லிம்களை தமது கட்சியில் உள்வாங்கியுள்ளோம் என்று காட்டுவதற்காக முஸ்லிம் பெயர் தாங்கிய சிலரை தேசியப் பட்டியல் ஊடாக அவர்கள் உள்வாங்கலாம். அதுவும் ஆபத்தானது தான்.

நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த காலங்களில் அவர்கள் உள்வாங்கிய முஸ்லிம்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை நாம் இன்னும் மறக்கவில்லை.இவ்வாறான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர் வார்த்தைகளை நம்பி ஏமாந்து விடக் கூடாது. நமது கையால் நமது கண்களை குத்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிட விடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல

தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவானது எமது மக்களுக்கு ஏற்புடையது அல்ல

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW