வாக்காளர் அட்டைகள் விநியோகம் குறித்து வெளியான தகவல்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை 70 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் எனவும் பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் அவற்றை விநியோகிக்கும் தபால் நிலையத்தில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மூன்றாவது நாளாக நேற்றும் நடைபெற்றது.
அதன்படி, இந்த 3 நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |