இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Department of Immigration & Emigration
By Laksi Nov 05, 2024 08:01 AM GMT
Laksi

Laksi

 இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு, இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை

இலத்திரனியல் அடையாள அட்டை

இந்த நிலையில், புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Issuance Of Electronic National Identity Card

மேலும், இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் அறிமுகத்தினால் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீனிக்கான இறக்குமதி வரி நீடிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி நீடிப்பு

ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!

ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW