வெளிநாட்டில் இருந்து திருகோணமலை வந்த பெண் படுகொலை
திருகோணமலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய வெளிநாட்டவர் என்பதுடன் அவர் தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையில் தங்கி இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |