லிட்ரோ எரிவாயுவின் விலை டிசம்பரில் அதிகரிக்கும்: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் கண்டிப்பாக உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் மேடைகளில் கூறியவை உண்மை எனின், கடந்த எரிபொருள் விலைத் திருத்தங்கள் இரண்டிலும் வரியினை நீக்கி எரிபொருள் விலைகளை குறைக்க முடியுமாக இருந்திருக்க வேண்டும்.
லிட்ரோ எரிவாயு விலை
அதற்கு நாடாளுமன்றம் தேவையில்லை, அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படலாமே. அன்று அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஒரு வைராக்கியம் உருவாக்கப்பட்டது.
விலைகளை இப்படியெல்லாம் குறைக்கலாம் என மேடைகளில் கூச்சலிட்டனர். இப்போது லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
லிட்ரோ நிறுவனமானது ஒக்டோபர், நவம்பர் மாத செலவினை சரி செய்யாது உறுதியான விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த விலைச்சூத்திரம் வெளியிடப்படுவதில்லை.
நான் உறுதியாகக் கூறுகிறேன். டிசம்பர் மாத விலைத் திருத்தத்தில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத விலைகள் அதிகரிக்கப்படாதவற்றை டிசம்பர் மாதம் அதிகளவு அதிகரிக்கப்படும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |