நெருங்கும் பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 107 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் அதிகரிப்பு
அத்தோடு ,தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 15 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1365 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 277 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |