வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 23, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி, வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

வாக்காளர் அட்டை விநியோகம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும்.

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல் | Notification Regarding Distribution Of Voter Card

நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் பொதுத்தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 759,210 ஆகும். அவற்றில் 21,160 நிராகரிக்கப்பட்டன.

இதன்படி 738,050 பேருக்கு தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பாகும்" என்றார்.  

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW