பங்களாதேஷில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..!
Sheikh Hasina
Bangladesh
World
By Laksi
பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி பங்களாதேஷில் போராட்டங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக கடந்த மாதம் (17) ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கல்வி அமைச்சு தீர்மானம்
இந்தநிலையில், சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |