நீதித்துறை அதிகாரிகளுக்கு வெளியான அறிவித்தல்
2024 ஆம் ஆண்டு சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறிய நீதிபதிகள் தவிர, நீதித்துறை அதிகாரிகள் குறித்து நீதித்துறை சேவை ஆணையகம் தகவல்களை கோரியுள்ளது.
அந்த வகையில் துறைசார் தலைவர்களாகச் செயல்படும் அனைத்து மேல்நீதிமன்ற நீதிபதிகளும், தங்கள் மேற்பார்வையின் கீழ் உள்ள அதிகாரிகளின் விபரங்களை தாமதமின்றி வழங்குமாறு கோரி, நீதித்துறை சேவை ஆணையகத்தின் செயலாளர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பொறுப்புகள்
மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களும் இந்த சுற்றறிக்கையின் கீழ் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திலும் பணியாற்றும் நீதித்துறை அதிகாரிகள் தவிர வேறு எத்தனை அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள், அவர்களில் எத்தனை பேர் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் எத்தனை பேர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் என்பது குறித்த தகவல்களையே ஆணையகம் கோரியுள்ளது.
சட்டத்தின் விதிகளின் கீழ், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை சேவை ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட பொது அதிகாரிகள், தங்கள் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டியவர்களில் அடங்குகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |