அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Rice Price
By Rukshy Mar 23, 2025 03:22 AM GMT
Rukshy

Rukshy

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2024/25 ஆம் ஆண்டு பெரும்போக பருவத்தில், இரு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெல் பயிர்களை அழித்துள்ளதாகவும், இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!

அரிசி பற்றாக்குறையை சமாளிக்க

தற்போது 8,50,000 ஹெக்டேயர் அளவிற்கு நெல் பயிரிடப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்தபட்சம் 20% வரை எதிர்பார்த்த விளைச்சல் இழப்பாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரிசி தட்டுப்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Rice Shortage Sri Lanka

மேலும், அறுவடை நேரத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளினால் நெல் வயல்கள் சேதமடைவதால், விளைச்சல் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனுராத தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தினசரி அரிசி தேவையானது 6,500 மெட்ரிக் தொன் என்பதுடன், ஆண்டுதோறும் 23,57,950 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரிசி களஞ்சியம் குறையுமாயின், நாடு கடுமையான அரிசி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்பதுடன், அரிசியை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

இடைத்தேர்தல்கள் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

இடைத்தேர்தல்கள் குறித்த புகார்களைச் சமர்ப்பிக்க புதிய மொபைல் செயலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW