வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்

South Eastern University of Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Rakshana MA Mar 04, 2025 11:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று(04) நண்பகல் 12:00 மணி முதல் 1.00 மணி வரை இடம்பெற்றுள்ளது.

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

வீழ்ச்சியடையும் டொலர் பெறுமதி! மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

போராட்டத்தின் நோக்கம்

இது தொடர்பில் கல்விசாரா ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.காமில் தெரிவிக்கையில்,

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த 9 வருடங்களாக சம்பள முரண்பாட்டுப் பிரச்சினை நீடிக்கின்றது இதற்கு எந்த ஒரு அரசும், அதிகாரிகளும் இதுவரை தீர்வு தரவில்லை.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் | Non Academic Staff Of Seousl Go On Strike

இந்நிலையில், அரசாங்கம் முன் வைத்துள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற கல்விசாரா ஊழியர்களுக்கு எந்த விதமான ஒதுக்கீடுகளும் வழங்கப்படவில்லை.

ஆகவே, அரசாங்கம் எமது மேற்படி கோரிக்கைகளையும், தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

கிண்ணியாவில் ஆயுதம் தேடி நில அகழ்வு நடவடிக்கை

அம்பாறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

அம்பாறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery