நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர் பதவிப்பிரமாணம்
10ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் (Nisam Kariyappar) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்று (18) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, நிஸாம் காரியப்பர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் (17) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், மொஹமட் முத்து இஸ்மாயில் மொஹமட் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும், இந்தமுறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |