தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

Advanced Agri Farmers Mission Sri Lanka Coconut price
By Laksi Dec 18, 2024 04:27 AM GMT
Laksi

Laksi

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

2025ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

தேங்காய் நெருக்கடி

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எமது அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளுக்கு 5 வருடங்களாக உரமிடப்படவில்லை.பொது மக்களும் உரம் இடும் நிலையில் இல்லை.

தேங்காய் நெருக்கடிக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு | Solution Coconut Crisis Fertilizer Relief Farmers

சமீபத்தில் உரக் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்து. அமைச்சரவையில் கலந்துரையாடி அதில் பாதியை தென்னைச் செய்கைக்கு வழங்க தீர்மானித்தோம்.

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வுகளை காண முடியும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த மேலும் தெரிவித்துள்ளார்.  

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW