2025ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

Sri Lanka Harini Amarasuriya Education School Children
By Laksi Dec 18, 2024 03:36 AM GMT
Laksi

Laksi

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (17)  உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அரசு நடவடிக்கை

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, ​​55% க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதகமான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

2025ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு | 6000 Rupees Allowance For School Students 2025

அவர்களில் 53% க்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை எழுதுபொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதாகவும் 26% க்கும் அதிகமானோர் ஏற்கனவே பயன்படுத்திய எழுதுபொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நாடியுள்ளனர் என்று மக்கள் தொகை மற்றும் புள்ளி விபர திணைக்களித்தின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

இதன்படி, பொருளாதாரச் சிக்கல்களால் மாணவர்களில் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி பாரிய விபத்து

பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்டஈடு: சஜித் கோரிக்கை

பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நஷ்டஈடு: சஜித் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW