நிந்தவூர் பொலிஸ் நிலைய மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை
நிந்தவூர் (Nintavur) பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025 ஆண்டிற்கான மாதாந்த அணிவகுப்பு மரியாதையும், பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று (23) காலை நடைபெற்றது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் உடைகள் வாகனங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மரியாதை அணிவகுப்பு
இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பு இடம்பெற்றது.
மேலும், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு மரியாதையில் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |