பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

SLFP Nimal Siripala De Silva General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 05, 2024 11:30 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட  தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கட்சியின் அரசியற்குழு மற்றும் மத்திய செயற்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "எவ்வாறாயினும், இந்த கூட்டணியின் கீழ் போட்டியிடும் இந்த முடிவு இந்த தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்

ரணிலுடன் இணைந்த முன்னாள் பிரதியமைச்சர்

புதிய சின்னம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியுடன் புதிய சின்னத்தில் போட்டியிடும். கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு தமது கட்சி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி | Nimal Team Slfp Cylinder Symbol General Election

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் டி சில்வா அணி அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW