இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது

Colombo Sri Lanka Bribery Commission Sri Lanka
By Laksi Oct 05, 2024 09:31 AM GMT
Laksi

Laksi

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இவர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

கைது 

இதன்போது, மூன்று பேருந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டு குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது | Dmt Employees Who Took Bribe Arrested

போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் அத்திணைக்களத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, சந்தேக நபரான போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தன்னிடமிருந்த இலஞ்சம் பெற்ற பணத்தைக் கிழித்தெறிய முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW