400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

Sri Lanka Politician Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Rakshana MA Oct 17, 2024 07:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய அரசாங்கமானது பொறுப்பேற்று 13 நாட்களிலே 419 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பிரஜை ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஈரான் பிரஜை ஒருவர் கைது

தொடர்ந்து தெரிவிக்கையில்,

அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கமானது வரையறை ஏதும் இன்றி கடன்களை பெற்றுக்கொண்டு வருகின்றது.

நிவாரணங்கள்

இவ்வாறு கடன்கள் பெற்ற போதிலும் நாட்டு மக்களுக்கு எவ்வித நிவாரணங்களையும் கொடுக்கவில்லை.

ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கு 3000 ரூபா கொடுப்பனவினை இதுவரையில் செலுத்த முடியாத நிலைமையும் உருவாகியுள்ளது.

மேலும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிட்டிருந்தனர். அதுவும் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல் | New Srilankan Govt 400 Billion Debt In 13Days

பணப்பறிமாற்றம்

புதிய அரசாங்கமானது கடந்த சில நாட்களாக 32.23 பில்லியனும், மணித்தியாலம் ஒன்றிற்கு 1.34 பில்லியனும் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் கடந்த 2ஆம், 9ஆம், 11ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் மொத்தமாக 419 பில்லியன் பணத்தினை திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரக் கடன்கள் மூலம் பெற்றுள்ளதாக ரோஹினி கவிரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்..

கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாது: சில்லறை வியாபாரிகள் சங்கம்

கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க முடியாது: சில்லறை வியாபாரிகள் சங்கம்

தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி: புற்றுநோய் ஏற்படும் அச்சம்

தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி: புற்றுநோய் ஏற்படும் அச்சம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

Gallery