அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் அடையாள அட்டை
புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகள் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன(Eranga Weeraratna) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான டேட்டா சிஸ்டத்தை உருவாக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும், இம்மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் ஐடி
அத்துடன், இந்த டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதில் கைரேகைகள், முகம் மற்றும் கண்களுக்கு கறுப்பு மை போன்ற விவரங்களைப் பெறுவதற்கு மூன்று படிமுறைகள் பின்பற்றப்படுவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த முக்கியத் தகவல்களைப் பெறுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |