புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

Anura Kumara Dissanayaka Maithripala Sirisena Sri Lanka Government Of Sri Lanka
By Laksi Oct 10, 2024 07:17 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வானது  இன்று (10) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

2011ஆம் ஆண்டு பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பிறகு இலங்கையின் வரலாற்றில் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஆவார்.

பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

பிரதம நீதியரசர் நியமனம்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக இணைந்து கொண்ட பெர்னாண்டோ, 30 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றியுள்ளார்.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம் | New Chief Justice Of Sri Lanka Appointed

அத்துடன், இவர் சிரேஷ்ட அரச சட்டத்தரணி, பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார்.

இதனையடுத்து, சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய போது, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்ட அவர், மார்ச் 2018இல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW