பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தபால் மூல வாக்களிப்பு அக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த தினத்தில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு
தபால் மூல வாக்களிப்பு
தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |