தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு

Election Commission of Sri Lanka Sri Lanka General Election 2024
By Laksi Oct 10, 2024 06:27 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இன்று (10) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தபால் வாக்கு

அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு | Postal Voting Application Is Closed Today

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுயேட்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

சுயேட்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்து சுயேட்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் வைப்புச் செய்ய வேண்டும்.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் நிறைவு | Postal Voting Application Is Closed Today

அதன்படி நேற்று (09) வரை 293 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW