சவப் பெட்டி தூக்கி மதுபான சாலைக்கு எதிராக அம்பாறையில் ஆர்ப்பாட்டம்
அம்பாறை - கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக தெரிவித்தது நேற்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஒரு மதுபானசாலை
ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இக்கிராமத்திற்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இதன்போது பொதுமக்கள் கூறியுள்ளனர்.
குறித்த
பிரதேசத்திற் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் வருகை தந்த
நிலையில் மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும்
தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும், மதுபான சாலையை
அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி
மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து
சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |