நாட்டில் தற்போது தட்டம்மைக்கான தடுப்புத்திட்டம் நடைமுறைக்கு
தட்டம்மைக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு நவம்பர் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மைக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிறுவனத்தின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களில் இவ் வேலைத்திட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்மை நோய் பதிவு
இது தொடர்பாக சுகாதார துறை தெரிவிக்கையில், இலங்கையானது தட்டம்மை நோய் இல்லாத நாடு என்ற பட்டியலில் காணப்பட்டாலும் 2023ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டின் சில பகுதிகளில் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் இதற்கு முன்னர் ஒரு டோஸ் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் இன்னும் பெறாதவர்கள் அனைவரும் ஆபத்திலுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |