நாட்டில் அடுத்த வருடம் வரை தொடரவுள்ள தேங்காய்க்கான தட்டுப்பாடு
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் லாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியானது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னை உற்பத்தி
தென்னை உற்பத்திக்கு தேவையான வெப்பநிலை மற்றும் பருவ மழை என்பவற்றின் குறைபாடுகள் அதன் உற்பத்தி குறைவுக்கு காரணமாக அமைகின்றது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எதிர்பார்த்ததை விட குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் தேங்காய் பருப்பு இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேங்காய் ஒப்சன் ஊடாக குறிப்பிட்ட அளவு தேங்காய் விற்பனை செய்யப்படும். 100 ரூபாவிற்கு தேங்காய் ஏலத்தை நடத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |