முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியரக்ளுக்கான சம்பள அதிகரிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Oct 31, 2024 07:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (30) மாத்தறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி: சுங்க திணைக்களம்

இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி: சுங்க திணைக்களம்

குறுகிய காலம் ஆட்சி

மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசியல் அதிகாரம் என்பது பல நிறுவனங்களின் பலத்தினால் தீர்மானிக்கப்படுவதாகும். எங்களுக்கு சில இடங்களிலே அதிகாரம் உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்து மிகக்குறுகிய காலமே சென்றுள்ளது.

முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியரக்ளுக்கான சம்பள அதிகரிப்பு | Government Salary Increase Announcement

மேலும் ஜனாதிபதி எனும் பதவி அரசியல் அதிகாரத்தின் வலுவான பதவி அத்துடன் அமைச்சரவை என்பது வலுவான இடம். ஆனால் தற்போது அமைச்சரவையில் நாங்கள் மூவர் தான் இருக்கின்றோம். ஜனாதிபதி ஆகிய நான், பிரதமர் மற்றும் அமைச்சர்.

இது உலக சாதனைகளில் இடம்பிடிக்கும் அமைச்சரவை. பலமான அமைச்சரவை அமைக்க விடாமல் எப்படி எங்களை அசைக்கலாம் என்று எண்ணுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் கொடூரம் : கொங்கிறீட் கற்களால் தாக்கி கணவன், மனைவி படுகொலை

யாழ்ப்பாணத்தில் கொடூரம் : கொங்கிறீட் கற்களால் தாக்கி கணவன், மனைவி படுகொலை

பொய்யான குற்றச்சாட்டுக்களும் வதந்திகளும்

இதன் காரணமாக தான் பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்புவதோடு, பொய்க்குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாகவும், பணம் ஒதுக்கப்பட்டதாகவும், அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறுகின்றனர். அப்படியெனில் அவர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுத்திருக்கலாமே, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஒன்றுதான்.

முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியரக்ளுக்கான சம்பள அதிகரிப்பு | Government Salary Increase Announcement

பணம் ஒதுக்கினாலும் சரி, ஒதுக்காவிட்டாலும் சரி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் வரவு செலவுத் திட்டத்திலேயே அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் ஊடாகவே அதிக சதவீத வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருந்தது. எனவே, அதை உடைக்கவும் சமூகத்தில் குழப்பங்களை உருவாக்கவும் இதுபோன்ற பொய்யான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்னும் சில மாதங்களில் அரசாங்கம் விழுந்து விடும் என்று கூறுபவர்களுக்கு, இந்த நாட்டை கட்டியெழுப்பாதவரை தேசிய மக்கள் சக்தியால் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் தலையீட்டுடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் : கோஷல விக்ரமசிங்க

அரசியல் தலையீட்டுடன் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் : கோஷல விக்ரமசிங்க

மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தி அல்ல : ஏ.எம். ஜெமீல்

மாற்றத்திற்கான மாற்றீடு தேசிய மக்கள் சக்தி அல்ல : ஏ.எம். ஜெமீல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery