பொத்துவிலில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு
பொத்துவில்(Pottuvil) பிரதேசத்தில் இளைஞர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (23) பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவு 01இல் நடைபெற்றுள்ளது.
இளைஞர் கழகம்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Connect -2025 இளைஞர் கழகங்கள் எனும் தொனிப்பொருளில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் எனும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் முபாறக் அலி, பொத்துவில் பிரதேச செயலக கிராம நிலதாரிகள் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நசீர், பிரதேச செயலக உதவி சமுர்த்தி முகாமையாளர் ஏ.கே.எம்.ஹாரூன், 01 கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் எம்.வீ.காமிலா, பிரதேச சம்மேளன முன்னாள் தலைவர் எம்.ஏ.எம்.நௌபல் மற்றும் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



