ஒரே மேடையில் இடம்பெற்ற இரு இனத்தவரின் திருமண நிகழ்வு
இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிகளுக்கு ஒரே மேடையில் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
திடீரென பெய்த அடைமழையின் விளைவாக, ஒரு முஸ்லிம் குடும்பம் கலக்கத்தில் இருந்த ஒரு இந்து குடும்பத்திற்கு உதவி செய்து தங்கள் திருமண மேடையை பகிர்ந்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
அதேவேளை, மத நல்லிணக்கத்தைக் குறிக்கும் வகையில், இது நடைபெற்றுள்ளதாக சமூக வலையத்திளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
திருமண நிகழ்வு
புனேவின் வான்வாடி பகுதியில் ஒரு விருந்து மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பை நடத்திக் கொண்டிருந்தபோது, மற்றொரு இந்து குடும்பம் அதே முற்றத்தில் வெளியே தங்கள் பிள்ளைகள் திருமணத்துக்கு ஒரு விதானத்தை அமைத்திருந்தது.
திருமணம் நடக்க இருந்த நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும், வானம் மேகமூட்டமாகி, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதன் விளைவாக, வெளியில் அமைக்கப்பட்டிருந்த விதானம் நனைந்தது. சுப நிகழ்வு தடைபட்டதால் இந்து குடும்பம் மற்றும் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடு
மழை குறையுமா என்று சிறிது நேரம் காத்திருந்தும் எந்தப் பலனும் இல்லை. இந்த கடினமான நேரத்தில், விருந்து மண்டபத்தில் தங்கள் திருமண வரவேற்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்ப உறுப்பினர்களை இந்து குடும்ப உறுப்பினர்கள் அணுகியுள்ளனர்.
தங்களின் நிலையை விளக்கி, திருமண விழாவை மண்டபத்தில் நடத்த அனுமதி கோரியுள்ளனர். இந்நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, தங்கள் மேடையைப் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியுடன் சம்மதித்துள்ளனர்.
மேலும், அவர்களின் ஒத்துழைப்புடன், இந்து திருமணம் அவர்களின் மரபுகளின்படி சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது. பின்னர், இரு குடும்பத்தினரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |