காத்தான்குடியில் விசேட சுற்றிவளைப்பு : 42 பேர் கைது

Sri Lankan Peoples Eastern Province Crime
By Rakshana MA May 24, 2025 05:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடியில்(Kattankudy) பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக மொத்தமாக 42 பேர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறையில் மாணவர்களை தாக்கிய பிக்குவுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு!

அம்பாறையில் மாணவர்களை தாக்கிய பிக்குவுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு!

அதிரடி சுற்றிவளைப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடியில் விசேட சுற்றிவளைப்பு : 42 பேர் கைது | Special Raid At Kattankudy

கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று(24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து வெளியான பேருந்து விபத்து : ஒருவர் பலி

மட்டக்களப்பில் இருந்து வெளியான பேருந்து விபத்து : ஒருவர் பலி

தயாசிறியின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு

தயாசிறியின் செயற்பாடுகள் குறித்து விசாரிக்க விசேட குழு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery