பகிடிவதை வேண்டாம் என்ற மாணவி மீது தாக்குதல்
புதிதாக வரும் மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்த வேண்டாம் என் கூறிய மாணவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த மாணவனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23) வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் சிங்கள மாணவர்களுக்கிடையே புதிதாக பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களை பகிடிவதை செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வாக்குவாதம்
இந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது புதிய மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என அந்த மாணவி கூறியதையடுத்து மாணவியின் கன்னத்தில் மாணவரொருவர் தாக்கியுள்ளார்.
இதன்போது காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்கிய மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |