அம்பாறையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது
அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை நகரில் நேற்று (23) 40 கொகைன் போதைப் பொருள் பாக்கெட்டுகளுடன் நடமாடிய சந்தேக நபரை விசேட சோதனை நடவடிக்கையின் போது அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர்
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பாறை நகருக்கு குறித்த போதை பொருளை கொண்டு வந்து விநியோகம் செய்யும் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஐஸ் வலையமைப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி அசேல கே.ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


