தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
இவ்வருடத்துக்கான தேசிய மீலாத் தின நிகழ்வு அம்பாந்தோட்டை மாவட்டத்தின், அம்பலாந்தோட்டை, போலான பிரதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் தேசிய மீலாத் தின நிகழ்வுகள், இம்முறை அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீலாத் நிகழ்வு
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |