இலங்கையில் இன்சுலின் தட்டுப்பாடா..! வெளியான தகவல்
அடுத்த நான்கு மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்புக்களை அரசாங்கம் ஏற்கனவே விநியோகித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் வரை நாட்டில் போதுமான அளவு இன்சுலின் இருப்பு இருப்பதாகக் கூறிய அமைச்சர், இன்சுலின் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.
மருந்துக்களின் இருப்பு
மேலும், மருந்துப் பற்றாக்குறையைத் தவிர்க்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு மருந்துகளின் இருப்பைப் பராமரிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுந்துள்ள பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சப்ளையர்களின் பலவீனங்களும் இதற்கு பங்களித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற பலவீனங்களைத் தடுக்க பல மாநிலங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |