சிக்குன்குனியா பரவும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கை
சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரித்து வருவதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.
தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும், டெங்குவைப் பரப்பும் அதே ஏடிஸ் கொசுவால் சிக்குன்குனியாவும் பரவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்ப்பரவலுக்கான காரணம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட வார இறுதி மற்றும் பள்ளி விடுமுறை காரணமாக பலர் சுற்றுலா சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதால், அவர்கள் வசிக்கும் வீட்டையும் சுற்றியுள்ள சூழலையும் கொசுக்கள் இல்லாமல் வைத்திருக்க தவறியதால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவ காரணமாக அமைந்துள்ளது.
அவர்கள் வாழும் சூழலை கொசுக்களுக்கு உகந்ததாக இல்லாத வகையில் பராமரித்தால், இந்த நோய் பரவுவதைக் குறைக்க முடியும்.
மேலும், ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், டெங்குவை சந்தேகித்து சிகிச்சை பெறுவது முக்கியம்.
அத்தோடு காய்ச்சலுக்கு பல்வேறு வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |