நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் பதவியேற்பு
Batticaloa
Parliament of Sri Lanka
Srilanka Muslim Congress
Sri Lanka Politician
By Laksi
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்று (03) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.
எம்.பி பதவி
இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.
எஸ். எம்.நளீம் இதற்கு முன்பு ஏறாவூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |