திருகோணமலையில் சித்திர போட்டியில் வெற்றி ஈட்டிய சிறுவர்கள் கௌரவிப்பு
Trincomalee
Eastern Province
School Children
By Laksi
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வருடம் தோறும் நடாத்தப்படும் சிதுவிலி சித்தம் ஓவியம், சித்திரம், கார்டூன் தேசிய போட்டி நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (3) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கௌரவிப்பு
இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலகத்தின் உளசமூக உத்தியோகத்தர் முஹம்மது மூமின் முகம்மது ஸம்ஸித் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |