மூதூரில் மாணவர்களின் சித்திர கைப்பணிக் கண்கட்சி
Sri Lankan Peoples
Eastern Province
School Incident
schools
By Kiyas Shafe
மூதூர் நஜீப் அப்துல் மஜீத் ஆரம்பப்பரிவு பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான சித்திர மற்றும் கைப்பணிப்பொருள் கண்காட்சி இரு நாட்கள் இடம்பெற்றது.
அதன்படி குறித்த கண்காட்சியானது, நேற்றைய தினம் (09) நிறைவு பெற்றது.
இதில் 500க்கு மேற்பட்ட ஓவியங்கள், 1300 க்கு மேற்பட்ட கைப்பணி பொருட்களும் கண்டுபிடிப்புகளும், எரிமலை, டைனோசர், நீர்வீழ்ச்சி, பிரமிட், கோள் மண்டலம் என்று 8 பிரமாண்ட காட்சி உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சி
மேலும், இந்த கண்காட்சியை பார்வையிட மூதூர் கல்வி வலயப் பிரிவிலுள்ள அதிகளவான பாடசாலை மாணவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










