கந்தளாய் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டம்
ஜனாதிபதியின் "தூய இலங்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க, கந்தளாய் பாடசாலைகளில் இன்று (ஜூலை 9) "தூய இலங்கை" வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் விழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்றன.
சிரமதானப்பணி
மேலும் இதன்போது கந்தளாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு, வீதி ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தனர்.
அத்துடன், ஸாஹிரா முன்பள்ளிப் பாடசாலையில் பெற்றோர்களுக்கு பாடசாலைகளின் சுகாதாரம் மற்றும் போசாக்கு சம்பந்தமான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டன.
தற்போது, கந்தளாய் பேராற்றுவெளி பாடசாலையில் சிரமதானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் பாடசாலை வளாகத்தை தூய்மைப்படுத்தி, மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



